ஹோம் /ராமநாதபுரம் /

சாயல்குடியில் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி

சாயல்குடியில் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் தடுப்பூசி

Ramanathapuram | சாயல்குடியில் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க செம்மறி ஆடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கால்நடைகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க செம்மறி ஆடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் கடலாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது உள்ள பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு அம்மை, படுசாவு, சிறுமல் போன்ற பல்வேறு நோய் தாக்கி உள்ளது. இதனால் நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட கால்நடைகள் ஒவ்வொரு நாளும் இறந்து வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஆடு வளர்ப்பவருடன் மருத்துவர்கள் 

இதையடுத்து, சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றுலா வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு நோய் தாக்குதலில் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்று கால்நடை மருத்துவமனையில் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.

செம்மறி ஆடுகள்

இந்த கோரிக்கையின் விளைவாக ராமநாதபுரம் மாவட்ட கால்நடை மருத்துவத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் சாயல்குடி அருகே உள்ள இலந்தை குளம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி 850-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கால்நடை மருத்துவதுறையினர் கடலாடி மற்றும் சாயல்குடியில் உள்ள ஒவ்வொரு கிராமமாக சென்று மருத்துவம் முகாம் அமைத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram