Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் கல்லூரியில் சேர ஏழை, எளிய மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகை

ராமநாதபுரத்தில் கல்லூரியில் சேர ஏழை, எளிய மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகை

வேலு மனோகரன் கல்லூரி

வேலு மனோகரன் கல்லூரி

ராமநாதபுரத்திலுள்ள வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், ஏழை எளிய மாணவிகள் கல்வி பயில ஏதுவாக கல்வி கட்டணத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு சலுகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Devipattinam, India
    ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலை மரப்பாலம் அருகே வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், ஏழை எளிய மாணவிகள் கல்வி பயில ஏதுவாக கல்வி கட்டணத்தில்  சேர்க்கைக்கு சலுகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லூரி நிர்வாகத்தினர் ஏழை, எளிய மாணவியர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்டணத்தில் சலுகை வழங்கியும், விடுதியில் சேரும் ஆதரவற்ற மாணவிகளுக்கும் கட்டண சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

    ராமநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளின் திறனறிந்து அதற்கான பயிற்சிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நவீன பாதுகாப்பு வசதியுடன் கல்லூரிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திறமைமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

    2022-23 ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. PG COURSES M.Com(General), M.Sc(Computer Science), DIPLOMA COURSES: DMLT (Diploma in Medical Laboratory Technology) ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

    80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதமும், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 சதவீதமும் சலுகைகள் வழங்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு vmhaetjuly2016@gmail.com என்ற இ-மெயில் வழியாகவும், 9751271999, 9926609012, 6381761488 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் கல்லூரி நிறுவனர் பொறியாளர் வேலுமனோகரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி