ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியேற்றம்- வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியேற்றம்- வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் வழிந்தோடிய சாக்கடை நீர்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெளியேறியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய கழிவு நீரால் வீசும் துர்நாற்றத்தால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குழாயில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியான 8 வது வார்டு காட்டுபிள்ளையார் கோயில் பகுதியில் கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் பரவி வருகிறது.

சாக்கடை நீர்

இதனால் அந்த பகுதியில் கழிவு நீர், குளம் போல தேங்கி துர்நாற்றம் அதிகளவில் வீசி வருகிறது. மேலும் அந்த சாக்கடைக் கழிவில் பன்றிகள் அதிகளவில் சுற்றி வருகிறது. மேலும் அப்பகுதியில் மர்ம காய்ச்சலும் பரவி வருகிறது.

ராமநாதபுரம்

இந்நிலையில், கழிவு நீர், குளம் போல தேங்கி துர் நாற்றம் அதிக அளவில் வீசுவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழிந்தோடும் சாக்கடை நீர்

இந்நிலையில், உடைப்பு ஏற்பட்டு தேங்கிய பாதாள சாக்கடை கழிவு நீரை போர்க்கால அடிப்படைகளில் வெளியேற்றி, இனிமேல் இவ்வாறு கழிவுநீர் வெளியேராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram