Home /ramanathapuram /

கள்ளச்சந்தையில் விற்க 200 மதுபாட்டில்களை எடுத்து சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் பலி

கள்ளச்சந்தையில் விற்க 200 மதுபாட்டில்களை எடுத்து சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் பலி

ராமநாதபுரம் விபத்து

ராமநாதபுரம் விபத்து

ராமேஸ்வரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் அரசு மதுபான கடையிலிருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு ராமேஸ்வரம் நோக்கி ஸ்கூட்டி இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது.

ராமநாதபுரம் விபத்து


அதேபோன்று ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பனை நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், தங்கச்சிமடம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

ராமநாதபுரம் விபத்து


இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் சாலையில் உடைந்து சிதறி ஓடியது. அப்பகுதியில் இருந்த குடிமகன்கள் அடிபட்டு காயம்பட்டு கிடப்பவர்களை மீட்காமல் மதுபாட்டில்களை எடுக்கும் முயற்சியில் தங்களது கவனத்தைச் செலுத்தி வந்தனர்.

ராமநாதபுரம் விபத்து


இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் விபத்து


இதில் பாம்பன் விவேகானந்தர் பகுதியைச்சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இன்று உயிரிழந்தார்.

ராமநாதபுரம் விபத்து


சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ராமேஸ்வரம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி