Home /ramanathapuram /

பரமகுடியில் கார் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்- காவல்துறை விசாரணை

பரமகுடியில் கார் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்- காவல்துறை விசாரணை

எரிந்த நிலையில் பைக்

எரிந்த நிலையில் பைக்

பரமக்குடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை பகுதியைச் சேர்ந்த நல்ல மீரான் என்பவரின் மகன் சேக் முகமது உசேன். அவருக்கு வயது 25. இவர் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதிகாலை எழுந்து பார்க்கையில் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

எரிக்கப்பட்ட நிலையில் இருசக்கர வாகனம்


இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து பரமக்குடி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எரிக்கப்பட்ட நிலையில் இருசக்கர வாகனம்


இதையடுத்து, இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமக்குடி டவுன் காவல்நிலையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி