Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் நாளை(சனிக் கிழமை) 3-ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் உள்ளிட்ட பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி