Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Keelakarai (Kilakarai), India
    ராமநாதபுரம் மற்றும் கீழக்கரைப் பகுதி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை, பட்டிணம்காத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் ஆகிய துணை மின் நிலையங்களில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுபதி நகர், ஓம்சக்தி நகர், ஆல்வின் பள்ளி பகுதிகள், வசந்தநகர், வெளிப்பட்டிணம் செட்டித் தெரு, தாயுமானவ சுவாமி கோவில் தெரு, இந்திராநகர், சிவன்கோவில் தெரு, ரோஸ்நகர், கான்சாகிப் தெரு, டிடி விநாயகா பள்ளித் தெரு, வைகை நகர், அம்மா பூங்கா, ராஜா பள்ளி விளையாட்டு மைதானப் பகுதி, தங்கப்பாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, ஏக்ககுடி, நல்லாங்குடி, திருஉத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம், கல்லகுளம், செங்கல்நீரோடை, கீழக்கரை நகர்.

    கீழக்கரை 500 பிளாட் பகுதி, மேலத்தெரு, வள்ளல் சாலை, வடக்குத் தெரு, சின்னக்கடைத் தெரு, சாலைத் தெரு, சங்குவெட்டி தெரு, சின்னமாயாகுளம், மாவிலாதோப்பு, கும்பிடுமதுரை, பாரதிநகர், முள்ளுவாடி, சதக் பொறியியல் கல்லூரிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி