ஹோம் /ராமநாதபுரம் /

ஆழ்கடல்ல மீன்பிடிக்க பயன்படுத்தும் வலை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பாருங்க!

ஆழ்கடல்ல மீன்பிடிக்க பயன்படுத்தும் வலை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பாருங்க!

X
ராமேஸ்வர

ராமேஸ்வர மீனவர்கள்

Ramanathapuram net | ராமேஸ்வரத்தில் மீன்பிடி வலை பின்னும் தொழிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

மீனவர்கள் மீன்பிடிக்க மிக முக்கியமானது மீன்பிடி வலைகள் தான். இந்த வலைகளை பின்னுவதுமுக்கியமான கலை என்றேசொல்லலாம்.மீனவர்கள்,ஒவ்வொரு மீனுக்கு ஓவ்வொரு விதமான மீன் வலைகள் பயன்படுத்துராங்க. அதில் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளும் பயன்படுத்தி மீன்படிக்கிறாங்க.

தற்போது மீன்பிடிக்க நைலான் போல் இருக்கும் நெகிழியினால் ஆன மீன்பிடி வலை செய்யப்படுகிறது.இதற்கு மால் இவ்வாறு பயன்படுத்த கூடிய வலைகளில் ஆழ்கடல் மீன்படிக்க பயன்படும் பெரிய வலையை பத்திதான் பாக்கபோறாம். இந்த ஆழ்கடல் மீன்பிடி வலையானது 33 மீட்டர் நீளத்தில் இருந்து 60 மீட்டர் நீளம் வரையிலும், 60 மீட்டர் அகலத்தில் இருந்து 150 மீட்டர் வரையிலும் உருவாக்கப்படுகிறது.

விசைப்படகுகளை பொருத்து இதன் நீளம், அகலம் மாறுபடும். ஒரு விசைப்படகிற்கு மூன்று அல்லது நான்கு மீன்பிடி வலைகள் தேவைப்படுகிறது. ஒரு கிலோ வலை ரூ.400 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு மீன்பிடி வலை சுமார் 50 கிலோவிற்கு மேல் தான் இருக்கும். மீன்வர்கள் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தினால் மீன்பிடி வலைகளை அங்கே விட்டுவிட்டு கரை திரும்புவர்.

இதனால் புது வலைகள் வாங்க 65,000 ரூபாய் வரையிலும் நஷ்டம் அடைகின்றனர். மீன்பிடிவலை பின்னுவதற்கு முன்பு மால் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.இந்த மால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள வலை பின்னும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் விற்கப்படுகிறது.

ALSO READ | ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் குறித்த முக்கிய அறிவிப்பு

இது,கர்நாடக மாநிலம் கார்வாரி பகுதியில் இருந்து வாங்கி வரப்படுகிறது. வலைகள் அறுந்து விடாமல் இருந்தால் தான் மீன்களை பிடிக்கமுடியும்.அறுந்து இருந்தால் அதன் வழியாக மீன்கள் தப்பித்து ஓடிவிடும். அதனால்,மாதம் ஒரு புது வலைகளை மீனவர்கள் வாங்குகின்றனர்.

ஒரு முழு வலை தயார் செய்ய 15 நபர்கள் இருந்தால் மூன்று மணி நேரம் ஆகிறது. ஐந்து நபர்கள் இருந்தால் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஆகுமாம்.ஒருநாள் விட்டு ஒருநாள் தான் வலை பின்னப்படுகிறது. 15- க்கும் மேற்பட்ட வலைபின்னும் இடங்கள் உள்ளன.

இதில் ஒவ்வொரு இடத்திலும் 40 முதல் 50-க்கும் மேற்பட்டவர்கள் வலை பிண்ணும் வேலை செய்துவருகின்றனர். அனுபவத்தை பொருத்து ஒரு வலைக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பளமாக பெருகின்றனர்.வலை பின்ன நூல், கத்தரிகோல், கத்தி, போன்றவை வைத்து மாலை பின்னி ஒவ்வொரு வலையையும் எந்தவொரு இயந்திரமும் இன்றி தன் கையில் வைத்து பின்னுகின்றனர் வலை பின்னும் தொழில் செய்பவர்கள்.

First published:

Tags: Fisherman, Local News, Ramanathapuram