உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கோவிலில் சந்தன காப்பு அகற்றம் நிகழ்வை ஆரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகில் முதல் சிவாலயமான திரு உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்திற்கு முன்னிட்டு சந்தன காப்பு அகற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர்,பால் தயிர், உள்ளிட்ட 32 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதிகாலையில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு பூசப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்வைக் தரிசனம் செய்ய மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய பகுதிகளில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram