பரமக்குடியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் சுகாதார நிலையம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து சுகாதாரம் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பரமக்குடி. பரமக்குடி நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாம்பூர், எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

அடிக்கல் நாட்டு விழா
இந்நிலையில், பரமக்குடி நகர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தினர்.

அடிக்கல் நாட்டு விழா
இதனையடுத்து, பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உள்ள பழைய மருத்துவமனை இருந்த இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இன்று 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3,500 சதுர அடியில் இரண்டு தளங்களுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.
பரமக்குடி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அமையவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.