Home /ramanathapuram /

Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்

Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்

ராமநாதபுரம் சேதமடைந்த படகுகள்

ராமநாதபுரம் சேதமடைந்த படகுகள்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் பெரும் சேதமடைந்தன.

பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் ஒரு விசைப்படகு முற்றிலும் சேதமடைந்துள்ளது. கடற்கரை மணலில் புதைந்த இரண்டு நாட்டு படகுகளை ஜேசிபி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 150 க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதை அடுத்து கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றொடு ஒன்று மோதியதில் அசோக் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு முழுமையாக சேதம் அடைந்தது.

அதேபோல, கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு படகுகள் சூறைகாற்றின் காரணமாக கடற்கரை ஓரத்தில் உள்ள மணலில் புதைந்ததை அடுத்து மீனவர்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து நாட்டுப்படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சேதமடைந்த விசைப்படகுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளதோடு கடல் சீற்றம் காரணமாக படகுகள் மோதி சேதம் அடைவதை தடுக்க தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடித்துறைமுகத்தை அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி