ஹோம் /ராமநாதபுரம் /

ஹார்மோனியம் வாசித்தலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவன்.. ராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு..

ஹார்மோனியம் வாசித்தலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவன்.. ராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram Student : சென்னையில் நடைபெற்ற கலைத்திருவிழால் முதலிடம் பிடித்த மாணவனுக்கு ராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த சீமான் மகன் சிம்மேந்திரவேலன். இவர் பிடாரிச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழக அரசு நடத்திய கலைத் திருவிழாவில் 9, 10ம் வகுப்பு பிரிவில் ஹார்மோனியம் இசைக்கருவி வாசித்தலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சான்றிதழும், பதக்கமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று சொந்த ஊர் திரும்பிய அந்த மாணவனுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஊர் மக்கள் சார்பாக ஆராத்தி எடுத்து, பட்டாசு வெடித்து டிரம் செட் அடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதைத்தொடர்ந்து பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. சிம்மேந்திரவேலனின் தந்தை சீமான் நாடகத்தில் ஹார்மோனியம் வாசித்து வருகிறார். அவர் கற்றுக் கொடுத்ததன் மூலம் இன்று மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

First published:

Tags: Local News, Ramanathapuram