ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் உச்சிப்புளி தர்ஹா வலசை என்மணங்கொண்டான் கடற்கரை அருகே அமைந்துள்ள 466- ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்ஹா உருவான வரலாற்று சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தர்ஹா வலசை என்மணங்கொண்டானில் அமைந்துள்ள இறைநேசர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்ஹா ஆனது 466-வது ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு கந்தூரி விழா நாட்களில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் இங்கேயே தங்கி கொடியேற்றிய நாளில் இருந்து கொடியிறக்கும் நாட்கள் வரை தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தர்ஹா உருவான வரலாற்று சிறப்புகள்:-
இறைநேசர் ஷாகுல் ஹமீது அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பூரில் கி.பி 1490-ல் (ஹிஜ்ரி 910) பிறந்தார். தந்தையார் சையிது ஹசன் குத்துாஸ். தாயார் சையிது பாத்திமா. மகனுக்கு சையது அப்துல் காதிர் என்று பெயரிட்டார்கள்.ஷாகுல் ஹமீது எட்டு வயதிலேயே குர்ஆனை மனப்பாடம் செய்து அரபு மொழி இலக்கணம், இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து குவாலியர் நகரில் சற்குரு சையிது முஹம்மதுவிடம் தங்கி 10 ஆண்டுகள் தங்கி ஞான, ஆன்மீகப் பயிற்சிபெற்றார்.
27-ம் வயதில் தனது ஆன்மிக பிரச்சாரப் பயணத்தை துவங்கினார். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், ஈரான், துருக்கி, ஏமன், ஈராக், ரோம்,சிரியா, சவூதி அரேபியா சீனா, மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று தீவிர இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் தென்காசி, காயல்பட்டினம், கீழக்கரை, உச்சிப்புளி, தஞ்சாவூர், திருவாரூர் முதலான ஊர்களிலும் இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்ட ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தனது இறுதி 28 ஆண்டுகளை நாகூரில் கழித்தார். கி.பி 1558- ஹிஜ்ரி 978 ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
இறைநேசர் ஷாகுல் ஹமீது நினைவாக ஆண்டுதோறும் உச்சிப்புளியில் அவரது பெயரில் அமைந்துள்ள ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்ஹாவில் கந்துாரி விழா நடைபெறுகிறது. முதலாவது கந்துாரி விழா கி.பி 1559-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டிலும் ஜமாதுல் ஆகிர் மாதம் முதல் பிறையிலிருந்து பத்தாம் நாள் வரை கந்தூரி வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் வெளிமாநிலங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கி கொடியேற்றப்படும் நாளில் இருந்து கொடியிறக்கப்படும் நாட்கள் வரை தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சென்றால், நினைத்தது நடப்பதால் ஓவ்வொரு வருடமும் அனைத்து மதத்தினரும் வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Tamil News