ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | பள்ளியில் அடிப்படை வசதிகள் கேட்டு சிலேட்டில் எழுதி மாணவர்கள் போராட்டம்

Ramanathapuram | பள்ளியில் அடிப்படை வசதிகள் கேட்டு சிலேட்டில் எழுதி மாணவர்கள் போராட்டம்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் மாணவர்கள்

ராமநாதபுரத்தில் சிலேட்டில் கோரிக்கைகளை எழுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் ஆதம்கொத்தக்குடி தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று சிலேட்டில் எழுதி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஆதம்கொத்தக்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த தொடக்கப் பள்ளியானது, 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் மேற்கூரை ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் உள்ளே வருவதால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

இதனால் இந்த பழைய கட்டிடத்தினை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி தரவும், கழிவறை வசதி இல்லாததால் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், பள்ளிக்கு செல்லும் வழியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை ஆபத்தான நிலையில் இருப்பதால் ஊரணியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் மாணவர்கள்

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் தங்களுடைய சிலேட்டில் புதிய கட்டிடம், கழிப்பறை வசதி, தடுப்பு சுவர் போன்ற வசதிகள் வேண்டும் என்று வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram