Home /ramanathapuram /

குழந்தைகள் அழாம ஹேர் கட்... குட்டீஸ்களைக் கவரும் சலூன் கடை...  ராமநாதபுர இளைஞரின் புதிய முயற்சி

குழந்தைகள் அழாம ஹேர் கட்... குட்டீஸ்களைக் கவரும் சலூன் கடை...  ராமநாதபுர இளைஞரின் புதிய முயற்சி

கார்

கார் இருக்கையில் குழந்தை

ராமநாதபுரத்தில் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சலூன் கடை பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யும் போது அவர்கள் அழது, அடம்பிடிக்காமல் இருக்க குழந்தைகளை கவரும் வகையில் ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சலூன் கடை பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

தலைமுடியை விதவிதமாக முடித்திருத்தும் செய்து கொள்வது Style Factor ஆக மாறிவிட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் மனிதர்களுக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்காற்றுகிறது.

கார் இருக்கையில் குழந்தை


பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஹேர்கட் செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க முடியாது என்பதை இளம் பெற்றோர்களின் அனுவத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சலூன் கடை


சலூன் கடையில் கடைக்காரரின் கத்திரிக்கோலுக்கு பயந்து குழந்தைகள் அழுது, அடம்பிடிப்பது அன்றாட காட்சியாக உள்ளது. குழந்தைகளுக்கு போக்கு காட்டி முடி திருத்துவதற்குள் கடைக்காரர்கள் நேர விரயம் ஆகி படாதபாடு பட்டுவிடுவார்கள்.

கார் இருக்கையில் குழந்தை


இருப்பினும் குழந்தைகளுக்கு ஹேர் கட் செய்வதெற்கென பிரத்யேக ஏற்பாடுகளை செய்து குழந்தைகளின் பிடித்தமான சலூன் கடையாக மாறியிருக்கிறது நம் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடை ஒன்று.

குழந்தைகளுக்கான கார் இருக்கை


பாம்பன் பேருந்து நிறுத்தம் எதிரே புதிதாக திறக்கப்பட்ட SS GRAND Beauty Saloon-ல் குழந்தைகளை கவரும் வகையில் பொம்மை கார் போன்ற இருக்கை அமைத்துள்ளனர். இந்த பொம்மை காரில் குழந்தைகளை கவரும் விதமாக இருக்கும் இருக்கையில் அமர வைக்கப்படும் குழந்தைகள், அழுகாமல் விளையாடியவாறே முடிவெட்டிக்கொள்கின்றன.

தொலைக்காட்சியில் கார்டூன் படங்களை போட்டு குழந்தைகளின் மனம் கவர்ந்து முடிதிருத்தும் செய்யும் வகையில் அமைத்துள்ளது பெற்றோர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் அழாமல் சந்தோசத்துடன் முடித்திருத்தும் செய்து கொள்வதோடு மீண்டும் முடித்திருத்தும் செய்ய அந்த கடைக்கு தான் செல்லவேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி