முகப்பு /ராமநாதபுரம் /

கொட்டி தீர்த்த மழை.. சாலையில் தேங்கும் வெள்ளம்: அலட்சியம் காட்டும் நகராட்சி நிர்வாகம்

கொட்டி தீர்த்த மழை.. சாலையில் தேங்கும் வெள்ளம்: அலட்சியம் காட்டும் நகராட்சி நிர்வாகம்

X
கொட்டி

கொட்டி தீர்த்து கோடை மழை வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்

சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு போதிய வடிகால் வசதியின்றி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குளம் போல் மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடை மழை பெய்து இரண்டு நாட்களாகியும் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் எதிரே மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழை நீரை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில்  கோடை மழை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த ஆண்டு சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம் லட்சுமணத் தீர்த்தத்தில் இருந்து செம்மமடம் பகுதி வரை சாலை விரிவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை நடுவே சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டது.

சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு போதிய வடிகால் வசதியின்றி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குளம் போல் மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது மழைநீர் ஆடை முழுவதும் அடிக்கப்படுகிறது, பெரும் விபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன்பு தேங்கியுள்ள மழை நீரை அகற்றிவிட்டு இனிமேல் மழைநீர் தேங்காதபடி வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Namakkal, Rain water