Home /ramanathapuram /

Ramanathapuram | ரயில் சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் தேங்கியிருக்கும் நீர்- பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலம்

Ramanathapuram | ரயில் சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் தேங்கியிருக்கும் நீர்- பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலம்

ராமநாதபுரம் சுரங்கப்பாதை

ராமநாதபுரம் சுரங்கப்பாதை

Ramanathapuram | ராமநாதபுரத்தில் பொதுமக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கான சுரங்கப்பாதை கூடுதல் சிரமத்தை அளித்துவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்குட்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்துக்கு எதிரே தென்குடா கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடிப்பது, மல்லிகை பூ விவசாயம் மேற்கொள்வது உள்ளது.

இந்த தென்குடாப் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் குடியிருப்பு மற்றும் மல்லிகை பூ விவசாயம் உள்ளடக்கிய கிராமமாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ரயில் போக்குவரத்து தண்டவாளம் இருந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் இந்த தண்டவாளம் வழியாக தான் இயங்கி வருகின்றன, இந்த தண்டவாளத்தை கடந்து தான் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர்.



இந்த ரயில்வே தண்டவாள பகுதியில் ஆளில்லா க்ராஸிங் பகுதியாக உள்ளதால் விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் முதல் திருச்சி வரையில் உள்ள பகுதிகளில் சுரங்கப்பாதை அமைத்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்துக் கொடுத்தனர்.



இந்நிலையில், சுரங்கபாதை அமைத்தும் அந்தப் பகுதியில் பயிலக்கூடிய மாணவர்கள் மற்றும் அங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கக்கூடிய பகுதி. சுரங்கப்பாதை அமைத்த பகுதியில் நீர் ஊற்று பெற்று வந்து கொண்டே இருக்கும்.



இதன் காரணமாக அந்த ரயில்வே சுரங்கப்பாதை மழை, வெயில் அனைத்து காலங்களிலும் நீர் வற்றாமல் இருந்து கொண்டே வருகிறது. இந்த பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் மோட்டார் போட்டு நீரை வெளியேற்றி வருகின்றனர்.

இந்தநிலையிலும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இங்கு நீர் தேங்குவதால் இந்த நீரில் பாசி படிந்து கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இவ்வழியாக செல்லும் போது வழுக்கி விழுந்து கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதையடுத்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையை முற்றிலுமாக மூடிவிட்டு, அதற்கு பதிலாக இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி