Home /ramanathapuram /

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சேதமடைந்த நிலையில் நடைமேடை.. அச்சத்தில் தொழிலாளர்கள்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சேதமடைந்த நிலையில் நடைமேடை.. அச்சத்தில் தொழிலாளர்கள்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ரயில் நிலையம்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலுள்ள ரயில் பராமரிப்பு நடைமேடை உடைந்த நிலையில் இருப்பதால் இதுவரையில் ஊழியர்கள் நான்கு பேர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடை உடைந்து விழுந்ததில் நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்மாதிரியான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருவதால் இங்கிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் ரயில் சேவை உள்ளது.

ராமேஸ்வரத்திலுருந்து அயோத்தியா, திருப்பதி, அஜ்மீர், ஹூப்ளி, வாரனாசி, ஓகா, புவனேஸ்வர், பனாரஸ் போன்ற நாடு தழுவிய அளவிலான முக்கிய நகரங்களுக்கும் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய தமிழக நகரங்களுக்கும் ரயில் சேவை உள்ளது.

சேதமடைந்த ரயில் நிலைய நடைமேடை


ராமேஸ்வரத்தில் ரயில் பராமரிப்பு பணிக்காக பராமரிப்பு நடைமேடை பிட்லைன் 2007 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு நிரந்தர பணியாளர்கள் 120 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 70 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நடை மேடையானது உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டு இதுவரையிலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவருக்கு முதுகெலும்பு உடைந்துள்ளது‌. இதனால் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வரும் சூழல் நிலவுகிறது.

ரயில்வே நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் பல பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்.

சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கும் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடையை(பிட்லைன்) சீரமைத்து தர வேண்டும் இல்லையென்றால் புதிய நடைமேடை அமைத்து தரவேண்டும் என தொழிலாளிகள் வலியுறுத்துகின்றனர்.

பலமுறை இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இனியும் தாமதிக்காமல் சீரமைப்பு பணி விரைவில் மேற்கொள்ளவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி