Home /ramanathapuram /

Ramanathapuram | ரயில்வே பாதுகாப்பு படையின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி- பயணிகள் கண்டுகளிப்பு

Ramanathapuram | ரயில்வே பாதுகாப்பு படையின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி- பயணிகள் கண்டுகளிப்பு

ராமநாதபுரம் படக்காட்சி

ராமநாதபுரம் படக்காட்சி

Ramanathapuram | இந்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதனை ரயில் பயணம் மேற்கொள்ள இருந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தின அமிர்த பொன்விழாவை முன்னிட்டு இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி வாகனம் பொதுமக்கள் பார்வைக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் படக்காட்சி


இதை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டுகளித்தனர். ரயில் நிலையத்தின் வெளியே தேசிய நெடுஞ்சாலை சாலையில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இருசக்கர வாகனப் பேரணி


இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெறவுள்ள 75- வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு வாகனத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை 1ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு ஜூலை 6ஆம் தேதி ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

இன்று மாலை ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட ஆறு இருசக்கர வாகனத்தில் 12 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், மதுரை மண்டலத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று காரைக்குடி வழியாக மதுரை சென்று அங்கிருந்து திருச்சி வழியாக ஜூலை 15ஆம் தேதி சென்னை சென்றடைந்து அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளனர்.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் இருசக்கர பேரணியை ராமேஸ்வரம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அரவிந்த்  துவக்கி வைத்தார். அவருடன் ராமேஸ்வரம் ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி