முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் தொடரும் மின் தடை.. பொதுமக்கள் அவதி!

ராமநாதபுரத்தில் தொடரும் மின் தடை.. பொதுமக்கள் அவதி!

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram powercut | கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து மின்சாரம் பற்றாக்குறையால் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து மின் தடை செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புண்ணிய ஸ்தலங்களையும், சுற்றுலா தளங்களையும் கண்டு கழித்துவிட்டு செல்கின்றனர்.

தற்போது, கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் தினந்தோறும் ராமேஸ்வரம் வரத்தொடங்கியுள்ள நிலையில், மறுபக்கம் தற்போது ராமேஸ்வரம் முழுவதும் மின்வெட்டு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் வெயில் சுட்டெரிப்பால் அதிகளவில் ஏசி, ஃபேன் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் போதிய மின்சாரம் உற்பத்தி கிடைக்காமல் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் மின்சாரம் கட்டமைப்பை ஏற்படுத்த மின்வாரியம் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க | நம்ம ஊரு சூப்பரு திட்டம்.. ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு..

இந்நிலையில், மின்சார பற்றாக்குறையால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து, வரும் நாட்களில் மின்சார தட்டுப்பாட்டை போக்கி போதிய மின்சாரம் தேவையை பூர்த்தி செய்ய ராமேஸ்வரம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Summer, Water Scarcity