முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட்ட காவல்துறை- ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

ராமநாதபுரம் | பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட்ட காவல்துறை- ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

X
பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர கழிவு வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டதை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வருடத்திற்கு இரண்டு முறை அந்தந்த மாவட்டத்தில் பொது ஏலம் விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில்வைத்து பொது ஏலத்தில் விடப்பட்டன.

இந்த ஏலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமன்றி மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புகள்- போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி

இதையடுத்து, நடைபெற்ற ஏலத்தில் முதற்கட்டமாக 552 வாகனங்களுக்கான பொது ஏலம் விடப்பட்டன. இதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டு 260-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram