ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் குண்டாறு செல்லும் வழிகளைச் சூழ்ந்த சீமைக் கருவேல மரங்கள்- சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் குண்டாறு செல்லும் வழிகளைச் சூழ்ந்த சீமைக் கருவேல மரங்கள்- சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

X
முள்செடி

முள்செடி நிறைந்த பாதை

கமுதி குண்டாறு செல்லும் வழிகள் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாறு செல்லும் வழிகள் சீமைகருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி பராமரிப்பில்லாமல் கிடக்கின்றன. மண்ணரிப்பை தடுக்க கட்டப்பட்ட தடுப்புச் சுவரும் சேதமடைந்துள்ளது. அதனை பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள குண்டாறு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பராமரிக்கப்படாததால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதோடு, மண் அரிப்பு ஏற்பட்டு மணல் மேடுகள் உருவாகி வருகின்றது. இதனால் அவ்வப்போது பெய்கின்ற மழை நீரை கூட குண்டாற்றில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி விவசாயம் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முள் மரம் மண்டிய பாதை 

கமுதி குண்டாறு அணைக்கட்டில் இருந்து மருதங்கநல்லூர், பேரையூர், பாக்குவெட்டி, கருங்குளம் வழியாக கொண்டுலாவி, கிடாத்திருக்கை, ஏனாதி ஆகிய பகுதிகளுக்கும் இதில் பேரையூரில் இருந்து முதுகுளத்தூருக்கு ரகுநாதப்பகுதியில் காவிரி ஆறாகவும் குண்டாறு உருமாறி செல்கின்றது.

முள் மரம் மண்டிய பாதை

பாக்குவெட்டி, மருதங்கநல்லூர், கருங்குளம் ஆகிய குண்டாறு செல்லும் பகுதிகளில் சீமைக்கருவேலம் மரங்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றது. இதனால் மழைநீர் செல்லாமல் தேங்கி நின்று வீணாகிறது.

மேலும் கமுதி குண்டாற்றின் கரையோரத்தில் மண்ணரிப்பை தடுக்கும் விதமாக கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் சேதமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் எனவும் சீமை கருவேலம் மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram