Home /ramanathapuram /

Ramanathapuram | 5 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் கழிவறைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

Ramanathapuram | 5 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் கழிவறைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டியிருக்கும் கழிவறை

பூட்டியிருக்கும் கழிவறை

Ramanathapuram | ராமேஸ்வரம் அரசு சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள நம்ம டாய்லட் பயன்பாடு இன்றி ஜந்து வருடங்களாக பூட்டியே உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தின் அருகில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஜே.ஜே நகர் பகுதியில் ஜந்து வருடங்களுக்கு முன்பு நம்ம டாய்லட் என்ற பெயரில் கழிவறைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, அமைக்கப்பட்டதில் இருந்து குத்தகை விடப்பட்டு சிறிது நாட்கள் பயன்பாட்டில் இருந்தது. குத்தகைக்கு விடப்பட்டதில் கள்ள மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.

இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். இதனால் சிறிது நாட்கள் மூடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு எந்தவொரு பராமரிப்பும் இன்றி உள்ளது.

பூட்டியிருக்கும் கழிவறைகள்


இதில் பகல் நேரங்களில் மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இப்பகுதியின் பின்புறம் செடி, கொடிகள் வளர்ந்து அதில் விசப்பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது.

பூட்டியிருக்கும் கழிவறைகள்


இந்த நம்ம டாய்லெட் கழிவறை ஆனது பயன்பாட்டிற்கு வராததால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கழிப்பறைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பூட்டியிருக்கும் கழிவறைகள்


இந்நிலையில் ஐந்து வருடங்களாக பூட்டி கிடக்கும் நம்ம டாய்லெட் கழிப்பறையை திறந்து விட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி