ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்தாகும். இந்த பாம்பன் சாலை போக்குவரத்து அப்போதைய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1987ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1991 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டது,
இந்த சாலை போக்குவரத்து தொடங்கியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றனர்,
இந்த சூழலில் இந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் அனைத்தும் பாம்பன் பாலத்தில் வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், விபத்துக்களை தடுக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

பாம்பன் பாலம்
இந்த வேகத்தடையானது மற்ற வேகத்தடை விட அதிக உயரமாக இருப்பதாலும், சிறிய ரக வாகனங்களை சேதப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது, அதேபோல இரவு நேரங்களில் வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு இந்த வேகத்தடை அருகே ஒளிரும் எந்த ஒரு விளக்குகளும் அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த பாம்பன் பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது,

பாம்பன் பாலம்
உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் உயரமாக போடப்பட்ட, வேகத்தடையின் அளவைக் குறைக்க வேண்டும், அதேபோல இரவு நேரங்களில் வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு ரிப்ளைட் போன்ற விளக்குகளைப் பொருத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாம்பன் பாலம்
இதுகுறித்து சுற்றுலா பயணி சதீஸ் கூறுகையில்,
‘இதற்கு முன்பிருந்த வேகத்தடை சிறியதாகவும் வாகனங்கள் வந்து செல்ல ஏற்றதாகவும் இருந்தது. ஆனால் அதை உடைந்து புதிதாக போடப்பட்ட வேகத்தடை அளவில் பெரியதாகவும் கார்கள் போன்ற வாகனங்கள் செல்லும்போது காரின் ஜேஸ் வேகத்தடையில் தட்டப்பட்டு மாட்டிக்கொண்டு வாகனம் சேதமடைவதாகவும் கூறுகின்றனர்.

பாம்பன் பாலம்
நேராக ஏற்றினால் வேகத்தடையில் மாட்டுவதால் சற்று வாகனத்தை வலதுபுறமாக ஏற்றுவதால் எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேகத்தடையின் அளவை குறைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து இளநிலை பொறியாளரிடம் கேட்டதற்கு தொடர்ந்து வாகனங்கள் வருவதால் விரைவாக போடப்பட்டது. இரவில் உயரம் தெரியாமல் அமைக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரைவில் சரியானதாக அமைக்கப்படும் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.