முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்!

X
சத்துணவு

சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கருப்பு உடைகள் அணிந்து புதிய பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளாக தமிழக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஓய்வூதியம் ரூ.6,750 வழங்கவும், தமிழக அரசு அமல்படுத்தி உள்ள காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே அமல்படுத்த வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக அனைவரும் தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram