Home /ramanathapuram /

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... நகராட்சி தலைவர் முக்கிய எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... நகராட்சி தலைவர் முக்கிய எச்சரிக்கை

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram | ராமநாதரபுரத்தில் வரி செலுத்தாத மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதரபுரத்தில் வரி செலுத்தாத மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ரூ.17. 90 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி, குத்தகை பாக்கி, வாடகை போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பணத்தில் இருந்துதான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.

    Also Read : ராமேஸ்வர ரயில் நிலையத்தில் சேதமடைந்த நிலையில் நடைமேடை.. அச்சத்தில் தொழிலாளர்கள்

    ஆனால், ராமநாதபுரம் நகராட்சியில் வசிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.10.90 கோடி, தொழில்வரி ரூ.63.31 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.1.72 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.2.93 கோடி, கடை வாடகை மற்றும் குத்தகை ரூ.1.71 கோடி என மொத்தம் ரூ.17.90 கோடி வரி பாக்கியை செலுத்தவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    ராமநாதபுரம் நகராட்சிக்கு இவ்வாறு அதிக அளவில் வரி நிலுவை உள்ளதால், நகராட்சி பொது நிதியில் இருந்து செலவினம் மேற்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வரிபாக்கிகளை வருகிற 30-ந்தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) லெட்சுமணன் உடன் இருந்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி