ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தை, பழைய பேருந்து நிலையம் இருக்கும் இடத்தின் அருகிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் என்று மண்டபம் பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்திற்கு முன்பு உள்ளது மண்டபம். இந்த மண்டபம்பேரூராட்சி பகுதியில் உரிய பேருந்து நிலையம் இல்லை என்பதால் கடந்த 35 வருடங்களாக அப்பகுதி மக்கள் பேருந்து நிலையம் ஏற்படுத்தி தர தொடர்ந்து பல மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்து வந்தனர்.
போதிய இட வசதி இல்லாததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் அமைக்க முடியவில்லை. கடந்த வருடம் ஜூலை மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான இடம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
மண்டபம் சிக்ரி அலுவலகம் அருகே உள்ள புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்து பேருந்து நிலையம் அமைக்க போதிய இடங்கள் கையகம்படுத்தி பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், மண்டபம் பகுதி பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் அமையும் இடம் மண்டபம் பகுதியில் இருந்து தொலைவில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள் சிறிது தூரம் நடந்து சென்று பேருந்துகளில் பயணம் செல்லும் நிலை ஏற்படும்.
மேலும் புதிய பேருந்து நிலையம் ஏற்படும் இடத்தில் இரவு நேரத்தில் அங்கிருந்து தனியாக நடந்து வரும் நிலை ஏற்படும். ரூ. 36 டிக்கெட் எடுத்து ராமநாதபுரம் சென்று விட்டு பேருந்து நிலையத்திலிருந்துவீட்டிற்கு வர ஆட்டோவுக்கு ரூ.100 லிருந்து ரூ. 150 வரை செலவாகும். தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை கிடையாது. பேருந்தில் இருந்து இறங்கினால் வீட்டிற்கு நடந்தே சென்றுவிடலாம் என்கின்றனர் மண்டபம் பகுதி பொதுமக்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பழைய பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் புதிய பேருந்து நிலையத்திற்காக இடங்களை கையகப்படுத்தி அந்த இடத்திலேயே பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும், இல்லையென்றால் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மண்டபம் பகுதி பொதுமக்கள், ஆட்டோக்கள் மற்றும் கடைகள் அடைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram