முகப்பு /ராமநாதபுரம் /

"தண்ணீர் வேண்டும்" ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்!

"தண்ணீர் வேண்டும்" ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்!

X
காலிகுடங்களுடன்

காலிகுடங்களுடன் போராட்டம்

Ramanathapuram protest | ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள குனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கணக்கானோர் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் அருகே உள்ள குனங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் ஒருகுடம் ரூ.12 கொடுத்து வாங்கவேண்டிய சூழல் உள்ளதாகவும், சில நேரம் பணம் கொடுத்தாலும் கிடைக்காத சூழல் நிலவுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும் எனவும், இல்லையென்றால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து குனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Protest, Ramanathapuram, Water Scarcity