முகப்பு /ராமநாதபுரம் /

ஊராட்சி மன்ற அலுவலக விவகாராம்.. ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஊராட்சி மன்ற அலுவலக விவகாராம்.. ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

X
மாவட்ட

மாவட்ட ஆட்சியரிடம் மனு

Ramanathapuram News: கடலாடி அருகே கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மூன்று கிராமத்திற்கு பொதுவான இடத்தில் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தனிச்சியம் ஊராட்சியிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம், கொசவங்குளம், சேனாங்குறிஞ்சி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது புதிதாக கட்டப்படும் ஊராட்சி மன்ற கட்டிடம் தனிச்சியம் பகுதியில் கட்டப்படுவதால் இந்த பகுதியானது, கிருஷ்ணாபுரத்தில் இருந்து தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிதாக கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மூன்று கிராமத்தினரும் பயனடையும் வகையிலும் எளிதாக செல்லும் வகையிலும் அமைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்து சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram