Home /ramanathapuram /

Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்

Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்

காரல் மீன்கள்

காரல் மீன்கள்

Ramanathapuram | காரல் வகை மீன்கள் அதிக விலைக்கு போவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

    மருத்துவ குணம் வாய்ந்த காரல் மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீன்கள் நல்ல விலைக்கு செல்வதாக மீனவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் இருந்து 800-க்கும்‌ மேற்பட்ட விசைப்படகில் மீன்வர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் வலையில் அதிகளவில் காரல் மீன்கள் சிக்கயுள்ளன. இந்த காரல் மீன்கள் மருத்துவ குணங்கள் பற்றி காண்போம்.

    இந்த காரல் மீன்கள் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பால் சுரக்க அதிகளவில் பயன்படுகின்றன, இதனால் மீன் சந்தைகளில் அதிக வரவேற்பு இந்த மீனுக்கு உண்டு.


    இரண்டு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டதாக இருக்கும் அதிகபட்சமாக எடையாக 500 கிராம் வரையில் இருக்கும். சிறிய மீனாகவும் தட்டையாகவும் காணப்படும். இந்திய மற்றும் மேற்கு பசுபிக் கடலில் வாழ்பவை இந்திய மீன்கள்.



    காரல் மீனானது பேர்சிஃபாரமீசு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மீன் ஆகும். தொண்டையில் ஒளிரும் உறுப்பைக் கொண்டவை. இரவில் ஒளி உருப்பின் மூலமாக கடலுக்குள் ஒளி ஏற்படுத்துமாம்.



    கருவாடாகவும், மீனாகவும் உணவுக்காகவும், இதன் சக்கை கோழிகளின் வளர்ப்பு தீவனமாகவும் உள்ளது. இதில் வைட்டமின்-டி அதிகளவு நிறைந்துள்ளது. உடலின் எதிர்ப்பு சக்தி திறன், மூளை வளர்ச்சிக்கு சிறந்த ஒன்று.



    இந்த காரல் மொத்தம் ஒன்பது வகைகளாக உள்ளது. கிலோவிற்கு 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது, வெளிநாடுகளுக்கு 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய்வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி