தேவிபட்டினமானது
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வடக்கு நோக்கி 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புராண காலத்தில் தேவிபுரமாக இருந்த இக்கோவில் காலப்போக்கில் தேவிபட்டினமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வரலாறு என்னவென்றால், புராணங்களில் தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனின் கொடுமைகளை பற்றி தேவர்கள் பராசக்தியிடம் கூறினர். தேவர்களை காக்க மகிஷாசுரனுடன் போரிட பராசக்தி இங்கு வந்துள்ளார்.
பராசக்தி இங்கு வந்ததை அறிந்த மகிஷாசுரன் சக்கரதீர்த்ததில் ஒளிந்து கொண்டான். தனது சக்தியால் மகிஷாசுரனை வெளியில் கொண்டு வந்து வதம் செய்து கொன்று சாபவிமோசனம் வழங்கி, தேவர்கள் அனைவரும் அமிர்தத்தை பொழிந்து அன்று முதல் தேவிபுரமாக இருந்த ஊரானது தேவிபட்டினமாக மாற்றப்பட்டது என்று நம்பப்படுகிறது.
இங்கு புனித தீர்த்தமாக விளங்கும் கடலில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்கள் இருக்கின்றன. இந்த நவகிரகங்களுக்கு நவபாசன சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நவகிரகங்களால் ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவி காட்சி கிடைத்ததாகவும் பின்பு ராவணனுடன் போரிட்டு போரில் வென்றதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
நவபாஷாண நவகிரகங்கள் சிறப்பு: 2000 வருடத்திற்கு மேலாக கடலில் இருந்தாலும் அன்று முதல் இன்று வரை நவகிரகங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு வரும் பக்தர்கள் தானாகவே அங்கு அமைந்திருக்கும் நவகிரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இதனால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கினால் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் மற்றும் பித்ருதோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
முன்பிறவி பாவங்கள், பித்ரு சாபங்கள் நீங்க பக்தர்கள் அதிகளவில் இங்கு வருகை புரிகின்றனர். ஆடி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் சென்று விட்டு இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இங்கு கோவில் தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு மாலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.