முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் உற்சாகம்!

ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் உற்சாகம்!

X
கனமழை

கனமழை

Ramanathapuram rain | ராமநாதபுரத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மழை கொட்டி தீர்த்தது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க ராமநாதபுரம் நகர் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கனமழை முதல், மிதமான மழை பெய்யும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகாலை மற்றும் பகல் நேரத்தில் பலத்த காற்றுடன் மழையானது கொட்டி தீர்த்தது. மேலும், இடியுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்ததால் கோடை வெயிலின் தாக்கமானது பொதுமக்கள் தாக்கி வந்தநிலையில் சற்று குளிர்ச்சி நிலவி உள்ளது.

இதையும் படிங்க | ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து, அரை மணி நேரத்திற்கு மேலாக நல்லமழை பெயத்தால் சாலையில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடியது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் குறைந்து மழை மேகமூட்டமாக காட்சி அளிக்கிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Heavy rain, Local News, Ramanathapuram