ராமேஸ்வரத்தில் வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்யும் கெட்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட குல்பி ஐஸ்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தீவிர சோதனை செய்து அனைத்தையும் அழித்து பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவேண்டும் என்று எச்சரித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி, குல்பி ஐஸ், பஞ்சுமிட்டாய், பாப்கான் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் வட மாநிலத்தவர்கள் விற்பனை செய்யும் குல்பி ஐஸ்கள் தரமற்று இருப்பதாக ராமேஸ்வரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
இந்த தகவலையடுத்து ராமேஸ்வரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் குல்பி ஐஸ் தாயார் செய்யும் வடமாநிலத்தவர் வீடுகளிலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார். இந்நிலையில், சோதனை நடத்தியதில் கெட்டுப்போன குல்பி ஐஸ்கள் கேன்களில் வைக்கப்பட்டிருந்த தெரியவந்ததையடுத்து அனைத்தையும் மொத்தமாக கீழே ஊற்றி அழித்தனர்.
ALSO READ | மாநில அளவிலான நெசவு போட்டி.. பெருமை சேர்த்த பரமக்குடி நெசவாளர்கள்!
மேலும் குல்பி ஐஸ்களுக்கு செயற்கை வண்ணம் சேர்ப்பதற்காக உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயன வண்ணப் பொடிகளை பறிமுதல் செய்து சுத்தமான தண்ணீரில் பாதுகாப்பான முறையில் குல்பி ஐஸ் தயாரிக்க வேண்டும் என அனைவரையும் எச்சரித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ice cream, Local News, Ramanathapuram