ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

Ramanathapuram | மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் மற்றும் ஏஐடியூசி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மீனவர்கள் மற்றும் ஏஐடியூசி அமைப்பினர் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி மற்றும் மீனவர்கள் இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் போராட்டம்

இதுகுறித்து பேசிய மீனவர்கள், ‘புயல் பருவ கால சேமிப்பு நிதி மற்றும் மீன்பிடி குறைவு காலம் நிவாரணம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் விசைப்படகுகளும், உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரியிடம் மனு அளிக்கும் போராட்டக்காரர்கள்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமீனவர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram