ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | கருகிய பயிருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

ராமநாதபுரம் | கருகிய பயிருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

X
விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த வெண்ணத்தூர் கண்மாய் பாசன பகுதிகளில் தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து, பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அடுத்துள்ள வெண்ணத்தூர் கண்மாய் தண்ணீரை நம்பி வெண்ணத்தூர், மேட்டுகொள்ளை, பாப்பனந்தல், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்யாததாலும், பாசனத்திற்கு தண்ணீர் வராததாலும் சாகுபடி செய்திருந்த நெல் அனைத்தும் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டு கருகியது. கடன் பெற்று பயிரிடப்பட்ட அனைத்தும் கருதியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் | இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து, பாதிப்படைந்த மூன்று கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய நெற்பயிருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.30 ஆயிரம் வழங்கவும், பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram