முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

X
வறட்சி

வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை 

Ramanathapuram farmers protest | ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும்‌ தண்ணீர் இன்றி காய்ந்து கருகிபோனது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரியும் ஆட்சியர் அலுவலகத்தைக் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும்‌ தண்ணீர் இன்றி காய்ந்து கருகிபோனது.இந்நிலையில் அதற்கான இழப்பீடு தொகை மற்றும் வறட்சி நிவாரணம் வழங்கவும், மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களைக் நடத்திருந்தனர்.

ALSO READ | பரமக்குடி ஸ்ரீ கருமேனி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்!

இதனைத் தொடர்ந்து,அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு காவல்துறை ஆய்வாளர் சமாதானம் செய்தபின்‌ விவசாயிகள் ஆட்சியரிடம்‌ மனு அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Protest, Ramanathapuram