ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் வழங்கப்பட் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்துஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியிருப்பதாவது, “2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், மின்இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.2ஆயிரமும் 7.5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ. 27 ஆயிரத்து 500-ம் 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30, ஆயிரமும் 15 குதிரைத்திறன் மின் இணைப்புக்கட்டணம் ரூ. 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு தகுதியில்லாத விண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
இதையும் படிங்க : இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஏற்கனவே மின் இணைப்புக் கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Ramanathapuram