முகப்பு /ராமநாதபுரம் /

200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது... இழப்பீடுகோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட விவசாயிகள்

200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது... இழப்பீடுகோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட விவசாயிகள்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் விவசாயிகள்

Ramanathapuram | ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தை அடுத்த ஊரவயல் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், விவசாய பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஊரவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு 200-ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த சாகுபடிக்கு வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து வேளாண் பணிகளை செய்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், நெற்பயிர் முளைத்து துளை விடும் கடைசி கட்டத்தில் நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் இல்லாததாலும் போதிய மழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி போனது.

இதனால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊரவயல் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். கருகிப்போன நெற்பயிர்களோடு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram