ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் பத்திரகாளி அம்மனுக்கு அலகு குத்தி பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் பத்திரகாளி அம்மனுக்கு அலகு குத்தி பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பால்குடம்

பால்குடம் எடுக்கும் பக்தர்கள்

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் பத்திரகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து அலகு குத்தி பாலபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் காவல் தெய்வமாக உள்ள பத்திரகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து அலகு குத்தி பாலபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் காவல் தெய்வமாக உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டி தினந்தோறும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வந்தது.

நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்

பத்திரகாளி அம்மன் கோவிலில் வருடா வருடம் அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும். இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் அதிகாலை 200-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், 50-க்கும்‌ மேற்பட்டோர் அலகு குத்தி காவடி எடுத்தனர்.

மேளதாளம்

இதையடுத்து, பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து ராமநாதசுவாமி திருக்கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, பால் குடம் எடுத்து வந்து பத்திரகாளி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

பால்குடம் எடுக்கும் பக்தர்கள்

அதன்பிறகு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்ப தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உள்ளூர் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram