ஹோம் /ராமநாதபுரம் /

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை; ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை; ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்

கடல்

கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன்,  மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் காலை முதல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கடல் சீற்றத்துடன் இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதிகளில் நேற்று காலை முதல் வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாக காற்று வீசியது. அதேபோல கடல் சீற்றத்துடன் இருந்தது.

இலங்கை வடக்கு பகுதியில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.

இந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு நிலையானது பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சீற்றமாக கடல்

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலிலேயே ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகவும் கடல்சீற்றத்துடனும் இருந்தது.

தீவிரமாக வீசிய காற்று

காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக பாறைகளின் மீது மோதி நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை எழும்பின.காலையில் இருந்து மழை பெய்யாமல் மேகமூட்டத்துடன் இருந்தது.

சீற்றமான நிலையில் கடல்

இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன், மண்டபம் பகுதிகளில் சுமார் 1500-க்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையாமல் இருப்பதற்காக மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram