முகப்பு /ராமநாதபுரம் /

தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்த ராமநாதபுரம் நீதிமன்றம்

தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்த ராமநாதபுரம் நீதிமன்றம்

X
ஆயுள்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உள்ள சோழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஜேசிபி ஓட்டுனரான வடவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே இருந்த முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், முன் விரோதம் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் சோழந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது தலையில் கல்லை தூக்கிப்போட்டு ராஜ்குமார் படுகொலை செய்துள்ளார்.

இதனைத்தொடரந்து, இந்த வழக்கில் ராஜ்குமாரை திருப்பாலைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் குற்றவாளி ராஜகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

First published:

Tags: Local News, Ramanathapuram