இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஓரியூர், கலியநகரி, புல்லகடம்பன் உள்ளிட்ட ஊராட்சிகளில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குளங்கள் வெட்டபடும் அளவுகள் குறித்தும் ஊரணி வெட்டப்பட்டுள்ள அளவு குறித்தும் கேட்டறிந்தார்.
ஓரியூர் ஊராட்சியில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஊரணி, குளங்களை நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வார நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்களும் தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் ஆக்கிரமப்புகளை அகற்றி காணாமல் போன குளத்தை கண்டறிந்து தூர்வாரிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்.
கோடைகாலத்தில் மீதமுள்ள குளங்கள், ஊரணிகள், கண்மாய்களை தூர்வாரவும், சாலை மற்றும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தேவையான தார்ப்பாய் மற்றும் மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளிடம் நேரில் வழங்கினார். அப்போது குளங்களில் இறங்கி செல்ல படித்துறைகளை கட்டித்தரவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார், வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, துணை இயக்குனர் தனுஷ்கோடி, உதவி இயக்குனர் ராம்குமார், உதவி பொறியாளர் புஷ்பநாதன்,நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டப் பொறியாளர் தேவராஜ், ஓரியூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரோஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.