முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி...

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி...

பாஜக மாவட்ட தலைவரை கொலை செய்ய முயற்சித்த இருவர்

பாஜக மாவட்ட தலைவரை கொலை செய்ய முயற்சித்த இருவர்

Ramanathapuram | ஆர்.எஸ்.எஸ் பேரணி முடித்து வீடு திரும்பிய ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் மீது மர்ம நபர்கள் இருவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக உள்ளவர் தரணி முருகேசன். ராமநாதபுரம் கேணிக்கரையில் வசித்து வரும் இவர், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்டு விட்டு வீடு நோக்கித் திரும்பியபோது முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் இருவர், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து இவரது காரில் மோதியதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆயுதங்களைக் கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பாஜகவினர் கொலை  முயற்சியில் ஈடுபட்ட இருவரை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு 

 இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக்கோரியும் தரணி முருகேசனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் காவல் துறையினர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் பின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

top videos
    First published:

    Tags: BJP, Ramanathapuram, RSS