ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பழமைவாய்ந்த கலங்கரை விளக்கம் சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் அமைந்துள்ளதுஇந்த 187 ஆண்டுகள் பழமைவாய்ந்த கலங்கரை விளக்கம். இந்த கலங்கரைவிளக்கமானது 1835-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட 100 அடி உயரம் உடைய உருளை வடிவ கலங்கரை விளக்கமாகும்.
இந்தியாவில் உள்ள முக்கிய இரண்டு புனித தலங்களில் ராமேஸ்வரம் ஒன்று.புனித தலம் மட்டுமில்லாமல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதில் ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் கடந்த ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலை பாலமும் கடல் மேல் அமைந்து மண்டபம் நிலப்பரப்பை தமிழகத்தோடு ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது.
இந்த பழமைவாய்ந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து பார்த்தால் மேற்கு பக்கம் பாம்பன் பாலத்தையும், தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் குருசடைத்தீவு மற்றும் கிழக்கு பக்கத்தில் ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் கெந்தமாதன பர்வதம் ஆகியவற்றை ஒரு இடத்தில் இருந்து பார்த்து ரசிக்க முடியும்.
இதையும் படிங்க | ஆழ்கடல்ல மீன்பிடிக்க பயன்படுத்தும் வலை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பாருங்க!
மேலும், 1846-ம் ஆண்டு ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டு, எரிபொருளாக தாவர எண்ணெயும், மீன் எண்ணெயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தனைசிறப்புகள் வாழ்ந்த கலங்கரை விளக்கத்தைசுற்றுலாத்தலமாக அறிவிக்கவும், சுற்றுலா பயணிகள்தீவின் அழகை ரசிக்க அனுமதித்தால் தங்களது வாழ்வாதாரம் மேலும் உயரும் என்று பாம்பன் பகுதி மக்கள்பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சருக்கு பலமுறை கடிதமும் மனுக்களும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில்,டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றகூட்டத் தொடரில் இந்தியாவில் மொத்தமாக 65 கலங்கரை விளக்கமும், தமிழகத்தில் 11 கலங்கரை விளக்கமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், தனுஷ்கோடி, கீழக்கரை ஆகிய மூன்று கலங்கரை விளக்கம் சுற்றுலா தள திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் பாம்பன் கலங்கரை விளக்கத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளால் தங்களது வாழ்வாதாரம் மேம்படும். அங்குள்ள பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாம்பன் பகுதி மக்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
இதையடுத்து தனுஷ்கோடியில் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கமானது திறந்த அன்று மட்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.அதன் பிறகு பூட்டிய நிலையில் உள்ள அந்த கலங்கரை விளக்கத்தையும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்தியாளர்: மனோஜ், ராமேஸ்வரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Rameshwaram