ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. புயலால் அழிந்த இந்த ஊரையும், தூய்மையான கடலின் அழகையும், கடல் காற்றையும் கண்டு ரசித்து மகிழ தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகை தராங்க.
இப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசித்தவாறே, கடல் காற்றை சுவாத்திக்கொண்டே இந்த பகுதியில் ஃபிரஷ்ஷா பிடிக்கப்படும் மீன்களில் இருந்து சமைக்கப்படும் மீன் குழம்பு சாப்பாடு, ஃபிஷ் பிரை போன்ற உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிட்டு வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்க்காகவே 50-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இந்த பகுதியில உள்ளன. இந்தப்பகுதி மீனவர்கள் கரைவலையில் மீனைபிடிச்சு உயிரோட எடுத்துட்டு வந்து இந்த உணவகங்களுக்கு வந்து கொடுப்பாங்க.
தனுஷ்கோடி போகும் வழியில முகுந்தராயன் சத்திரத்தில் இருக்கிற Mr.Fish மீன் உணவகம் கொஞ்சம் பிரபலமா திகழ்ந்துட்டு இருக்கதா கேள்விப்பட்டோம். இந்த உணவகத்துக்கு கூகுள்ல கூட 4.6 ரிவ்யூ கொடுத்துருக்காங்க. சரி அப்படி என்ன தான் இங்க ஸ்பெஷல்னு பாக்கலாம்னு உள்ள கடைக்குள்ள நுழைஞ்சோம்.
இந்த கடையோட உரிமையாளர் முத்துகுமரன் பட்டதாரி இளைஞர். வீட்டிலேயே இருந்து WEBSITE DEVELOPER ஆக பணிபுரிந்து வராரு. இவரோட அம்மா இவருக்கு துணையா கடையில இருக்காங்க.
2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது இந்த கடை. ஏழு வருடங்களுக்கு மேலாகவே சுற்றுலா பயணிகளுக்கு அவரே சமைச்சு கொடுத்து, உணவு பரிமாறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா பயணிகள்ட வரவேற்பு கிடைச்சு இன்னைக்கு ஒரு நல்ல ஹோட்டலா தனுஷ்கோடில விளங்கிட்டு இருக்கு.
இந்த கடையோட சுவையை ஒரு முறை புரிஞ்ச சுற்றுலா பயணிகள் அடுத்த முறை ராமேஸ்வரம் வரும்போது தவறாம இவரோட கடைக்கு தேடி வந்து சாப்பிட்டுட்டு போறதா செல்லுராங்க.
தனுஷ்கோடிக்கு சினிமா சூட்டிங்க வந்த நிறைய பேர் சாப்பிட்டுட்டுருகாங்க. அதுல ரீசண்டா மலையாள நடிகர் மோகன்லால், இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா என நிறையபேர் இங்க சாப்பிட்டுருக்காங்க.
இங்கு மீன்களின் விலையை பொருத்து, உணவுகளின் விலை உள்ளது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்தால் உணவின் விலை குறைவாகவும், வரத்து குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றாற் போல் விற்பனை செய்யப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் அதிகமாக முள் இல்லாத மீன்களையே உண்ண ஆசப்படுவாங்க. அதுனாலயே முள் அதிகமாக இல்லாத வஞ்சரம், பாறை மீன்கள் அதிகளவில் சமைத்து கொடுக்கிறார்கள். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு சில மீனோட சுவையும், அதில் இருக்கும் ஊட்டச்சத்தும் தெரியாததால், ஊட்டச்சத்து அதிகம் உள்ள மீன்களையும் சமைத்து கொடுக்குறாங்க.
இந்த கடையானது மதியம் 12 மணியில் இருந்து நான்கு மணி வரை கடை இருக்கும். வரும் வாடிக்கையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், முன்பே சமைத்து எடுத்து வைப்பதற்கு எளிதாக இருக்கும் என்று கூறினார்.
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram