Home /ramanathapuram /

Ramanathapuram | தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம்: தடுப்புகளைத் தாண்டி வீசிய கடல் அலை

Ramanathapuram | தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம்: தடுப்புகளைத் தாண்டி வீசிய கடல் அலை

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

Ramanathapuram | தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தடுப்புகளை தாண்டி அலை வீசியது. இதனால் சாலையில் குவிந்த சிறிய பாறைக்கற்கள், மணல்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தடுப்புகளை தாண்டி அலை வீசியது. இதனால் சாலையில் குவிந்த சிறிய பாறைக்கற்கள், மணல்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர், புயலால் அழிந்த பகுதிகளை சூழ்ந்த கடல் நீர் சூழ்ந்ததால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி, அரிச்சல்முனை தென்கடலில் நள்ளிரவில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

அதனால், சீறிப்பாய்ந்த கடல் அலைகள் பாறை தடுப்புகளை தாண்டி சாலைக்கு வந்தது. தொடர்ந்து கடல் சீற்றத்தால் சிறிய பாறைக்கற்கள் மற்றும் மணல்கள் கடல் அலையில் அடித்து சாலையில் குவித்து கிடைக்கின்றன.

சாலையில் வீசப்பட்டிருக்கும் கற்கள்


இதனால் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் பாறை கற்கள், மணல் குவிந்து சாலையை மூடியிருந்தது. அதனால், அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் சாலையை கடந்து சென்றனர். சாலை முழுவதும் கற்கள் கிடந்ததால் வாகனங்கள் கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

சாலையில் வீசப்பட்டிருக்கும் மணல்


மேலும் திடீரென ஏற்பட்ட இந்த கடல் சீற்றத்தால் அப்பகுதி மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்து மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.

தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை அமைத்து இதுவரை இதுபோன்று கடல் சீற்றம் ஏற்பட்டது இல்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். கடல் அலைகளின் அருகில் நின்று சுற்றுலா பணிகளும் புகைப்படம் எடுத்து சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி