முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் தொலைந்துபோன செல்போனை மீட்டுக்கொடுத்த சைபர்கிரைம்!

ராமநாதபுரத்தில் தொலைந்துபோன செல்போனை மீட்டுக்கொடுத்த சைபர்கிரைம்!

X
54

54 செல்போன்களை மீட்டுக்கொடுத்த சைபர்கிரைம் 

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகார்களை போலீசார் உடனடியாக சரிசெய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்துபோனதாக அளிக்கப்பட்ட புகாரில் 54 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து விட்டதாகவும், திருடு போகிவிட்டதாகவும் அளிக்கப்படும் புகார் மனுக்களை காவல்துறையினர் முறையாக பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த புகார் மனுக்களை காவல்துறையினர், சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு 253 செல்போன் தொலைந்து போனதாக புகார் மனுக்கள் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் செல்போன் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தற்போது 54 செல்போன் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஒப்படைத்தார். இதுவரையில் 134 செல்போன்கள் கண்டறியப்பட்டு புகார் அளித்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள 119 செல்போன்களை கண்டறியும் சோதனையில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Mobile phone, Ramanathapuram