ஹோம் /ராமநாதபுரம் /

95 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. பரமகுடியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்..

95 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. பரமகுடியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்..

X
நலத்திட்ட

நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

Ramanathapuram News : பரமக்குடி அருகே ஏனாதி கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் முதியோர் உதவித்தொகை உத்தரவு ஆணையும் 95 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஏனாதிகோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகமானது இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 95 பயனாளிகளுக்கு ரூ.5,44,415 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவிதொகை வழங்குவதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த மூதாட்டி உதவி ஆட்சியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

மூதாட்டியின் இரண்டு கைகளையும் பிடித்து உதவி ஆட்சியர் தூக்கி விட்டு மூதாட்டியிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், வேளாண் துறை, வருவாய்த்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை உட்பட பலதுறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram