ஹோம் /ராமநாதபுரம் /

ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா? -  ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா? -  ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ராணுவ கல்லூரி

ராணுவ கல்லூரி

Study in Military College | ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அது குறித்த வழிமுறைகளையும் ராமநாதபும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது. இந்த கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 8ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சேரலாம்.

இதற்கு விண்ணப்பிக்க 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு 3.12.22 அன்று நடைபெறவுள்ளது.

இந்த தேர்விற்கான விண்ணப்பம் தகவல் தொகுப்பேடு பெற கட்டண தொகை ரூ.600. இதனை வங்கி வரைவோலையுடன் கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் -248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - முதல் பரிசு ரூ.5000 அறிவிப்பு

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கு வரைவோலை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர் சென்னை-3 என்ற முகவரிக்கு 15.10.22-க்குள் அனுப்ப வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், விவரங்களுக்கு ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in இணையதளத்தை பார்க்கவும். மேலும் விவரம் அறிய ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை அணுகலாம் என ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram