Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் வண்டல் மண், கிராவல் மண் போன்றவற்றை எடுக்க சிறப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வண்டல் மண், கிராவல் மண் போன்றவற்றை எடுக்க சிறப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் மணல் எடுப்பதை எளிமையாக்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டல் மண், கிராவல் மண் உள்ளிட்ட மண் எடுத்து செல்ல எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். மேலும், உடனடியாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள (நீர் நிலை) கண்மாய்களிலிருந்து விவசாயப் பணிக்கு வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுத்துச் செல்வதை எளிமையாக்கும் விதமாக வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றும், கீழக்கரை, முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளையும், ஆர்.எஸ்.மங்களம், கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி அன்றும், திருவாடானை, கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி அன்றும் இச்சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்தி, வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி